கும்பகோணம் அடுத்த தென்னஞ்சோலை அம்மன் கோயிலில் ஆடித் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இந்த நிகழ்வில் திரளான பெண்கள் கலந்து கொண்டு முளைப்பாரி எடுத்தும், மண் குதிரையை சுமந்தும் நேர்த்திக்கடனை செலுத்தினர்.
இந்த விழாவில் தென்னஞ்சோலை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.