மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளதால் இன்று அல்லது நாளை அணை முழு கொள்ளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கர்நாடகா, கேரளா நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருதால் கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன.
அணையின் பாதுகாப்பு கருதி 2 அணைகளில் இருந்தும் வினாடிக்கு 1 லட்சத்து 65 ஆயிரம் கனஅடி உபரிநீர் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் மளமளவென உயர்ந்து வருகிறது.
இந்நிலையில், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து ஒரு லட்சத்து 55 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் 116.36 அடியை தாண்டியுள்ளது.
காவிரி டெல்டா பாசனத்திற்காக அணையில் இருந்து 16 ஆயிரம் 000 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ள நிலையில், நீர் இருப்பு 87.78 டிஎம்சியாக உள்ளது. நீர்வரத்தானது தொடர்ந்து இதே அளவில் வந்து கொண்டிருந்தால் மேட்டூர் அணை இன்றே நிரம்ப வாய்ப்புள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.