டெல்லியில் உள்ள பயிற்சி மையத்தில் மழைநீர் புகுந்ததால் 3 மாணவர்கள் உயிரிழந்ததைக் கண்டித்து சக மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
டெல்லியில் பழைய ராஜிந்தர் நகரில் இரு தினங்களுக்கு முன்பு பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இத்னால் சிவில் சர்வீசஸ் பயிற்சி மையத்தின் அடித்தளத்தில் மழைநீர் புகுந்தது.
இதில் மாணவர்கள் 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதற்கு கண்டனம் தெரிவித்து மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து மாணவர்கள் கூறுகையில், கடந்த இரண்டு நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தங்களை மாநகராட்சி அதிகாரிகள் சந்திக்கவில்லை என குற்றம்சாட்டினர்.
மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க டெல்லி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.