ஆடி கிருத்திகையை ஒட்டி சென்னை, வடபழனி முருகன் கோயிலில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
வடபழனி முருகன் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கிருத்திகை சிறப்பாக கொண்டாடப்படும். அந்தவகையில் இந்தாண்டு ஆடி கிருத்திகை சிறப்பு தரிசனம் அதிகாலையிலேயே தொடங்கியது.
இதனையடுத்து நீண்ட வரிசையில் காத்திருந்து முருக பெருமானை பக்தர்கள் தரிசித்து வருகின்றனர். பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் ஏராளமானோர் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
கூட்டத்தை ஒழுங்குபடுத்த தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு, காவலர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இன்று மட்டும் பிற்பகல் நடை அடைக்காமல் நாள் முழுவதும் தரிசிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.