மாலத்தீவின் பொருளாதாரத்திற்கு ஆதரவு அளித்துள்ள இந்தியாவிற்கு அந்நாட்டின் அதிபர் முகமது முய்ஸு நன்றி தெரிவித்துக் கொண்டார்.
மாலத்தீவில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் உரையாற்றிய அதிபர் முகமது முய்ஸு, மாலத்தீவின் கடனைத் திருப்பி அடைப்பதற்கு ஆதரவு அளித்துள்ள இந்தியா மற்றும் சீனாவிற்கு நன்றி தெரிவித்தார்.
உள்ளூரில் நிலவும் அமெரிக்க டாலரின் பற்றாக்குறையை போக்க வேண்டியது அவசியம் என வலியுறுத்திய அவர், இந்தியா மற்றும் பெய்ஜிங் ஆகிய நாடுகளுடன் நாணய மாற்று ஒப்பந்தங்கள் தொடர்பாக மாலத்தீவு அரசு பேச்சுவார்த்தையை நடத்தி வருவதாக கூறினார்.
மேலும், சுதந்திர வர்த்தகம் தொடர்பான ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடும் என மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸு நம்பிக்கை தெரிவித்தார்.