காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமிக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்துள்ளது.
காஞ்சிபுரம் மாநகராட்சியில் தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 51 உறுப்பினர்கள் உள்ள நிலையில் மேயர் மகாலட்சுமி யுவராஜ்ஜுக்கு எதிராக பல்வேறு எதிர்ப்புகள் இருந்து வந்தன.
திமுகவை சேர்ந்த இவருக்கு திமுக கவுன்சிலர்களே எதிர்ப்பு தெரிவித்த நிலையில் மேயரை பதவி நீக்கம் செய்யக்கோரி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையர் இடம் புகார் மனு அளிக்கப்பட்டது.
இது தொடர்பாக மேயர் மகாலாட்சுமி மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேற்றும் கூட்டம் இன்று கூட்டப்பட்டது.
ஆனால் திமுக கவுன்சிலர்கள் இன்ப சுற்றுலா சென்றுவிட்ட நிலையில் மீதமுள்ள கவுன்சிலர்களும் கூட்டத்தில் பங்கேற்கவில்லை, வெறிச்சோடி காணப்பட்ட இந்த கூட்டம் தோல்வியானதால் மேயருக்கு எதிரான தீர்மானம் தோல்வி அடைந்ததாகவும் அவர் தொடர்ந்து பதவியில் நீடிப்பார் எனவும் அறிவிக்கப்பட்டது.