டெல்லியில் ஐஏஎஸ் தேர்வுக்குத் தயாரான 3 பேர், வெள்ள பாதிப்பில் சிக்கி உயிரிழந்ததை தொடர்ந்து, பயிற்சி மையத்தில் ஆக்கிரமித்து சட்டவிரோதமாக கட்டப்பட்டகட்டுமானங்கள் இடித்து தள்ளப்பட்டன.
மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீஸாரின் துணையுடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மேலும், பழைய ராஜேந்தர் நகரில் செயல்பட்டு வந்த 13 ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் தரைதளத்துக்கு மாநகராட்சி சீல் வைத்தது.