ஆடி மாத விழாவையொட்டி, தமிழகத்தில் உள்ள திருக்கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் திராளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி பர்வதவர்த்தினி அம்மன் கோவிலில் ஆடி திருக்கல்யாண விழாவை முன்னிட்டு கொடியேற்ற விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
பர்வதவர்த்தினி அம்மன் சன்னதியில் எதிரே உள்ள தங்க கொடிமரத்தில் வேதமந்திரம் முழங்க கொடியேற்றப்பட்டது. பின்னர், சுவாமிக்கும், அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். ஆடி திருக்கல்யாண நிகழ்ச்சியானது 17 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.