ஈரோட்டில் ஆடிட்டர் வீட்டில் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் முக்கிய நபரை போலீசார் கைது செய்தனர்.
என்.ஜி.ஓ காலனியை சேர்ந்த ஆடிட்டர் சுப்பிரமணியம் கடந்த மாதம் வெளியில் சென்றிருந்த நிலையில் அவருடைய வீட்டிலிருந்து 235 பவுன் தங்க நகைகள் மற்றும் 48 லட்ச ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
இது சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், 2வது முக்கிய குற்றவாளியாக கருதப்படும் வினுசக்கரவர்த்தியை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்த 50 லட்சரூபாய் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.