நாட்டில் பாம்புக் கடியால் ஆண்டுக்கு 50 ஆயிரம் பேர் உயிரிழப்பதாக பாஜக எம்.பி. ராஜீவ் பிரதாப் ரூடி கவலை தெரிவித்துள்ளார்.
மக்களவையில் இதுதொடர்பாக பேசிய அவர், உலகிலேயே அதிகளவாக இந்தியாவில் பாம்புக் கடியால் ஆண்டுக்கு 40 லட்சம் பேர் வரை பாதிக்கப்படுவதாகவும், இதில் 50 ஆயிரம் பேர் உயிரிழக்க நேரிடுவதாகவும் வேதனை தெரிவித்தார். மேலும், பீகார் மாநிலம் வறுமையிலும் இயற்கை பேரிடரிலும் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதாக பாஜக எம்.பி. ராஜீவ் பிரதாப் ரூடி கூறினார்.