யூடியூபர் சவுக்கு சங்கரை 24 மணி நேரம் காவலில் வைத்து விசாரணை நடத்த போலீசாருக்கு உதகை நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
தமிழக காவல்துறையில் பணிபுரியும் பெண் காவலர்களை தரக்குறைவாக பேசிய யூடியூபர் சவுக்கு சங்கர் மீது உதகை புதுமந்து காவல் நிலைய ஆய்வாளர் அல்லிராணி சைபர் கிரைம் குற்ற பிரிவில் புகார் கொடுத்தார்.
அதன்பேரில், உதகையில் உள்ள நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி தமிழினியன் முன்னிலையில் சவுக்கு சங்கர் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, 30-ம் தேதி வரை, அதாவது நாளை மாலை வரை 24 மணி நேரம் போலீஸ் காவலில் வைத்து விசாரணை மேற்கொள்ள நீதிபதி அனுமதி அளித்து உத்தரவிட்டார்.