இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமாக கோயில் நிலத்தை சட்டவிரோதமாக அபகரித்துள்ள நபர்களிடம் இருந்து மீட்க வேண்டும் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே ஒருதட்டு என்ற கிராமத்தில் அமைந்துள்ள உத்தம நாச்சியம்மன் கோயில் இந்து சமய அறநிலை துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்த கோயிலின் பல லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை சிலர் முறைகேடாக பதிவு செய்து அபகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த கோவில் சொத்துக்களை மீட்டு தரக்கோரி இந்து மக்கள் கட்சியை சேர்ந்த ரவிக்குமார், மாவட்ட ஆட்சியர் காலில் விழுந்து மனு அளித்தார்.