ஆந்திராவில் பெய்து வரும் கனமழை காரணமாக புதுச்சேரி ஏனாம் பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரியில் உள்ள பாலயோகி பாலத்தை தாண்டி வெள்ள நீர் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, பிரான்சிபா, பால யோகி நகர், பழைய ராஜுவ் நகர், குருசம் பேட்டை, குரு கிருஷ்ணாபுரம் மற்றும் கடலோர கிராமங்கள் வெள்ள நீரில் மிதக்கின்றன.
மேலும், ஆற்றின் வெள்ளம் கரைகளை தாண்டி பாய்ந்து ஓடுவதால், படகுகளை பாதுகாப்பான இடத்தில் நிறுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீனவர்கள் ஆறு மற்றும் கடலில் மீன்பிடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.