மேட்டூர் அணையில் திறந்துவிடப்படும் தண்ணீரை டெல்டா மாவட்டங்களில் உள்ள ஏரி, குளங்களில் நிரப்ப நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற போராட்டத்தில், மேட்டூர் அணையில் திறக்கப்படும் தண்ணீர் வீணாக கடலில் சேரும் நிலை உள்ளதாக விவசாயிகள் குற்றச்சாட்டினர்.
மேலும், பாசன கிளை வாய்க்கால்கள் இதுவரை தூர்வாராமல் அலட்சியமாக இருக்கும் தமிழக அரசை கண்டித்து விவசாயிகள் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.