சென்னையில் பார்முலா 4 ஸ்ட்ரீட் ரேஸ் ஆகஸ்ட் 30 -ஆம் தேதி முதல் செப்டம்பர் 1 -ஆம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெற உள்ளதாக, தமிழ்நாடு விளையாட்டு மேம்பம்பாட்டு ஆணைய செயலர் மேக்நாத் ரெட்டி தெரிவித்துள்ளார்.
சென்னையில் முதன்முறையாக இரவு நேர பார்முலா 4 கார் பந்தயத்தை, கடந்த ஆண்டு டிசம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நடத்த தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திட்டமிட்டிருந்தது.
ஆனால், புயல் மற்றும் மழை வெள்ளம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில், சென்னையில் பார்முலா 4 ஸ்ட்ரீட் ரேஸ் ஆகஸ்ட் 30 -ஆம் தேதி முதல் செப்டம்பர் 1 -ஆம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெற உள்ளதாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் செயலாளர் மேக்நாத் ரெட்டி தெரிவித்தார்.
இந்த பந்தயத்தில், 8 அணிகள் பங்கேற்க உள்ளதாகவும், நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையிலே கார் பந்தயம் நடைபெற உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.