கடந்த மூன்று ஆண்டுகளில் 48 இந்திய மாணவர்கள் அமெரிக்காவால் எவ்வித காரணமும் இன்றி திருப்பி அனுப்பப்பட்டதாக மக்களவையில் வெளியுறவுத் துறை இணையமைச்சர் கீர்த்தி வரதன் சிங் தெரிவித்தார்.
அங்கீகாரமற்ற வேலைவாய்ப்பு, வகுப்பிலிருந்து இடைநீக்கம் செய்யப்படுவது உள்ளிட்ட காரணங்களால் இந்திய மாணவர்கள் தாயகம் அனுப்பப்பட்டிருக்கலாம் என்றும் அவர் கூறினார்.
இதுதொடர்பான கேள்வியை தெலுங்கு தேசம் கட்சி எம்பி பி.கே.பார்த்தசாரதி மக்களவையில் எழுப்பிய நிலையில், அதற்கு அமைச்சர் கீர்த்தி வரதன் சிங் பதிலளித்தார்.