ஆந்திர மாநிலம் கடப்பாவில், பிரபல கடையில் செல்போன் திருடிய இரண்டு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
மைதுக்கூர் கடைவீதியில் உள்ள செல்போன் கடைக்கு சென்ற இரண்டு பேர், பழுதான செல்போனை சரி செய்ய வேண்டும் என கடை உரிமையாளரிடம் கொடுத்துவிட்டு, கடையில் இருந்த மூன்று செல்போன்களை திருடிச் சென்றுள்ளனர்.
புகாரின்பேரில், வழக்குப் பதிவு செய்த போலீசார் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து குற்றவாளிகளை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.