நடிகர் தனுஷுக்கு எதிராக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தீர்மானம் நிறைவற்றியுள்ளது.
சென்னையில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைமையில் தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்க நிர்வாகிகள், தமிழ்நாடு திரையரங்க மல்டிபிளக்ஸ் உரிமையாளர் சங்க நிர்வாகிகள், தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டுக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், “பல தயாரிப்பாளர்களிடம் நடிகர் தனுஷ் பணம் வாங்கிக் கொண்டு அலைகழிப்பதால், அவரை வைத்து படம் எடுக்கும் முன்பு, திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தை கலந்து ஆலோசிக்க வேண்டும்” என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், “தமிழகத்தில் முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி 8 வாரங்களுக்கு பிறகே OTT தளங்களில் வெளியிட வேண்டும்” என்பது உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.