அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிசுக்கு ஆதரவு அதிகரித்து வருவதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் கமலா ஹாரிசும் போட்டியிடுகின்றர்.
கமலா ஹாரிஸ் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு ஒருவார காலத்தில் நன்கொடையாக மட்டும் ஆயிரத்து 674 கோடி கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த நிதி வழங்கியவர்களில் 66 சதவீதம் பேர் முதல்முறையாக நன்கொடை அளிப்பவர்கள் என்றும் தெரியவந்துள்ளது. புதிய கருத்துக்கணிப்பின் படி கமலா ஹாரிசே வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டதால் டிரம்ப் ஆதரவாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
















