டெல்லியில் ஐஏஎஸ் தேர்வு மையத்தில் மழைவெள்ளம் புகுந்து மாணவர்கள் 3 பேர், வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த விவகாரத்தில், கைதான 5 பேரை 14 நாள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கில் ஐஏஎஸ் பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டநிலையில், முதற்கட்டமாக 5 பேர் டெல்லி டீஸ் ஹசாரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அவர்களை 14 நாள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனிடையே, மாணவர்களின் உயிரிழப்புக்கு காரணமான நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி, பழைய ராஜேந்தர் நகரில் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.