இந்தியா – இலங்கை இடையேயான கடைசி டி-20 போட்டி பல்லகெலேவில் இன்று நடைபெறவுள்ளது.
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் விளையாடி வருகிறது.
முதல் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று, இந்திய அணி தொடரைக் கைப்பற்றியது. இந்நிலையில், இந்தியா இலங்கை இடையேயான 3-வது மற்றும் கடைசி டி-20 போட்டி, பல்லகெலேவில் இன்று நடைபெறவுள்ளது.
இந்த போட்டியிலும் வெற்றி பெற்று, இந்திய அணி தொடரை முழுமையாக கைப்பற்றுமென இந்திய ரசிகர்கள் எதிர்நோக்கியுள்ளனர். இந்த போட்டி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.