பெரம்பலூர் மாவட்டத்தில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதிய பேருந்து நிலையம் அருகே இருசக்கர வாகனம் திருடும் முயற்சியில் ஈடுபட்ட சதீஷ்குமார் என்பவரை போலீசார் விரட்டிபிடித்தனர்.
அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், பிரவீன் என்பவருடன் இணைந்து திருச்சி, பெரம்பலூர் மாவட்டங்களில் இருசக்கர வாகனங்களை திருடி குறைந்த விலைக்கு விற்றது தெரியவந்தது. இதனை அடுத்து இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 23 வாகனங்களை பறிமுதல் செய்தனர்.