பெண் யூடியூபரை அவதூறாக பேசியதாக பிரபல யூடியூபர் அபிஷேக் ரபியை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
யூடியூபில் பிரபலமாக திகழும் ”பிரியாணி மேன்” என்ற யூடியூப் சேனலை அபிஷேக் ரபி என்பவர் நடத்தி வருகிறார். இந்நிலையில் யூடியூபர் இர்பானின் கார் விபத்து குறித்தும், குழந்தை பாலினத்தை அவர் வெளியிட்டது குறித்தும் தனது யூடியூப் சேனலில் அபிஷேக் ரபி தொடர்ந்து கருத்துகளை வெளியிட்டு வந்தார்.
இதனால் இருவருக்கும் இடையே மோதல் நீடித்து வந்தது. சமீபத்தில் நேரலையின்போது அபிஷேக் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தன்னைப் பற்றி அவதூறாக பேசியதாக பெண் யூடியூபர் கொடுத்த புகாரின்பேரில் அபிஷேக் ரபியை பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.