விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே கிணறுவெட்டும் பணியில் ஈடுபட்ட 3 பேர் மர்மமான முறையில் உயிரிழந்தனர்.
அருங்குறிக்கை பகுதியில் உள்ள கண்ணன் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் கடந்த 10 நாட்களாக கிணறு வெட்டும் பணி நடைபெற்று வந்தது.
ஹரி கிருஷ்ணன், தனிகாசலம், முருகன் ஆகிய 3 பேர் கிணறு வெட்டும் பணியில் ஈடுபட்டு வந்த நிலையில், கிணற்றில் மூவரும் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் உடல்களை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.