பழனி முருகன் கோயில் ரோப் கார் சேவை நாளை ஒருநாள் மட்டும் நிறுத்தப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் மலைக்கோவிலுக்கு செல்ல பக்தர்களின் வசதிக்காக ரோப் கார் சேவை இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக நாளை ஒருநாள் மட்டும் ரோப் கார் சேவை நிறுத்தப்படுவதாகவும், பழுதடைந்த உதிரிபாகங்கள் மாற்றப்பட்டு 1ம் தேதி முதல் மீண்டும் செயல்பாட்டுக்கு வரும் எனவும் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.