கேரளாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக திருவனந்தபுரம் மண்டலத்துக்கு உட்பட்ட பகுதியில் ரயில் சேவை பாதிக்கப்பட்டது.
இதன் காரணமாக வள்ளத்தோல் நகர் மற்றும் வடக்கஞ்சேரி இடையே ரயில் சேவை பகுதியளவு பாதிக்கப்பட்டது. எர்ணாகுளம்- கண்ணூர் ரயில் திரிச்சூரில் நிறுத்தப்பட்டது.
திருநெல்வேலி- பாலக்காடு பாலருவி விரைவு ரயில் அலுவா ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. இதேபோல திருவனந்தபுரம்- ஷோரனூர் வேணாடு விரைவு ரயில் சாலக்குடியில் நிறுத்தப்பட்டது. ரயில் சேவை பாதிப்பால் பயணிகள் கடும் இன்னல்களை எதிர்கொண்டனர்.