கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து, ராணுவத் தலைமை தளபதியை தொலைபேசியில் தொடர்புகொண்டு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார்.
அப்போது வயநாட்டுக்கு தேவையான ராணுவ உதவிகளை அனுப்பிவைக்குமாறு ராஜ்நாத் சிங் அறிவுறுத்தியதாக தகவல் வெளியானது. இதைத்தொடர்ந்து, வயநாட்டில் ராணுவ வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.