வயநாடு நிலச்சரிவு தொடர்பான மீட்பு நடவடிக்கைகளில் உதவ, தமிழக பாஜக சார்பில் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு காரணமாக, ஏராளமானோர் உயிரிழந்துள்ள செய்தி மிகுந்த வருத்தமளிப்பதாக கூறியுள்ளார்.
நிலச்சரிவில் சிக்கியிருப்பவர்களுக்கும், அவர்கள் குடும்பத்தினருக்கும் மீட்பு நடவடிக்கைகளில் உதவ, பாஜக மாநிலப் பொதுச்செயலாளர் A.P.முருகானந்தம் தலைமையில், குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
மீட்புப் பணிகளிலும், மண்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்குவதிலும் இந்தக் குழு உதவி புரியும் என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.