திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.
குழந்தை பாக்கியம் வேண்டியும், திருமண வரம் வேண்டியும் பக்தர்கள் பல்வேறு பரிகார பூஜைகள் செய்தும், யாகம் வளர்த்தும் வழிபட்டனர். ஏராளமான பக்தர்கள் காவடி சுமந்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.