கடலூர் மாவட்டம் வடலூரில் தனியார் பள்ளி மாணவர் மீது ஈட்டி பாய்ந்ததில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
கடலூர் மாவட்டம் வடலூர் தர்ம சாலை பகுதியை சேர்ந்த திருமுருகன் என்பவரது மகன் கிஷோர், சந்தை தோப்பு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த ஜூலை 24ஆம் தேதி மாணவர்களுக்கு பள்ளி வளாகத்தில் விளையாட்டு பயிற்சி அளிக்கப்பட்டது. அப்போது ஈட்டி எறிதல் பயிற்சியின் போது, அங்கு நின்ற கிஷோரின் தலையில் எதிர்பாராதவிதமாக ஈட்டி பாய்ந்து படுகாயம் அடைந்தார்.
இதையடுத்து, விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவர் கிஷோர் மூளைச்சாவு அடைந்தார். இதனால் மனமுடைந்த அவரது தாயார் சிவகாமி தற்கொலைக்கு முயன்ற நிலையில், மாணவர் கிஷோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
வரது உடல் உறுப்புகள் மாணவரின் பெற்றோர் ஒப்புதல்படி தானம் செய்யப்பட்டன. ஈட்டி பாய்ந்து மாணவன் உயிரிழந்த சம்பவம் வடலூரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.