சென்னை மாநகராட்சியில் நிறுவனங்களுக்கான தொழில் உரிமக் கட்டணம் 30 ஆயிரம் ரூபாய் வரை உயர்த்தி மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள், பதிவு மற்றும் உரிமம் பெறுவதற்கான கட்டணத்தை மாநகராட்சி மாற்றியமைத்து தீர்மானம் கொண்டு வந்துள்ளது.
அதன்படி 500 ரூபாயாக இருந்த தொழில் உரிம கட்டணம், மிக சிறிய வணிகத்திற்கு 3 ஆயிரத்து500 ரூபாயும், சிறிய வணிகத்திற்கு 7 ஆயிரம் ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது.
அதேபோல், நடுத்தர வணிகத்திற்கான உரிம கட்டணம் 10 ஆயிரம் ரூபாயும், பெரிய வணிகத்திற்கு 15 ஆயிரம் ரூபாய் என்ற அளவிலும் உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும், பேக்கரி, மெடிக்கல் ஷாப், முடி திருத்த கடைகளுக்கு 10 ஆயிரம் ரூபாய் வரையும், துணிக்கடைகளுக்கு 15 ஆயிரம் ரூபாய் வரையும் உரிமக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும் சினிமா ஸ்டூடியோ, நகைக்கடைகளுக்கு 20 ஆயிரம் ரூபாய் வரையும், திருமண மண்டபங்களுக்கு 30 ஆயிரம் ரூபாய் வரையும் உரிம கட்டணத்தை உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.