2024-25ஆம் நிதியாண்டில் தமிழகத்தில் ரயில்வே துறை வளர்ச்சிக்கு மட்டும் 6 ஆயிரத்து 362 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் தளப்பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
தமிழ்நாட்டில் ஆயிரத்து 302 கிலோ மீட்டர் தூரத்திற்கு புதிய ரயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல், 687 புதிய ரயில் மேம்பாலங்கள் மற்றும் அடிமட்ட பாலங்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன என்றும் எல்.முருகன் சுட்டிக்காட்டியுள்ளார்.
2 ஆயிரத்து 152 கிலோ மீட்டர் தொலைவிற்கு தமிழ்நாட்டின் இரயில் பாதைகள் புதிதாக மின்மயமாக்கப்பட்டுள்ளன என்றும், 6 வந்தே பாரத் ரயில்கள் தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளன எனவும் அவர் கூறியுள்ளார்.
இதேபோல், அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் 77 ரயில் நிலையங்கள் புதிய பரிமாணம் அடைந்துள்ளதாக கூறியுள்ள மத்திய அமைச்சர் எல்.முருகன்,
தமிழக இரயில்வே துறைக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ள திட்டங்களின் உண்மைத் தன்மை என்றும் தெரிவித்துள்ளார்.