சீன முதலீடுகளுக்கு விதிக்கப்பட்ட தடையை மறுஆய்வு செய்ய முடியாது என மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் சமர்ப்பித்த பொருளாதார ஆய்வறிக்கையில், உலகளாவிய உற்பத்தி மையமாக இந்தியா திகழ வேண்டுமானால், ஒன்று ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும் அல்லது சீனாவிலிருந்து அந்நிய நேரடி முதலீட்டைப் பெற வேண்டுமென ஆலோசனை தெரிவித்தார்.
இதை ஏற்க மறுத்த மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், சீனாவிலிருந்து முதலீட்டை ஈர்ப்பதற்கான பேச்சுக்கே இடமில்லை என கூறினார்.
எல்லையில் சீனா அத்துமீறி நுழைந்ததால், இருநாடுகளுக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாக மோதல் போக்கு நீடிப்பது குறிப்பிடத்தக்கது.