ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை 100க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டதோடு தலையில் முக்காடு அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போகலூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ‘வீரவனூர்’ கிராமத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
குடிநீர், பேருந்து வசதி, மின்சாரம் உள்ளிட்ட எந்த வசதியும் இல்லாததால் இப்பகுதி மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.
இதுகுறித்து பலமுறை புகாரளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை தலையில் முக்காடு அணிந்தபடி முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.