வரும் 2025-26ஆம் நிதியாண்டில் நிதி பற்றாக்குறையை 4.5 சதவீதத்துக்கும் கீழ் கொண்டு வருவோம் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
மக்களவையில் பட்ஜெட் மீதான விவாதத்துக்கு பதிலளித்து பேசிய அவர், பிரதமர் மோடி தலைமையிலான அரசை தொடர்ந்து மூன்றாவது முறையாக தேர்ந்தெடுத்ததற்காக பொதுமக்களுக்கு நன்றி தெரிவிப்பதாக கூறினார்.
மக்களை முன்னிலைப்படுத்திய மத்திய அரசின் திட்டங்களை உணர்ந்ததால், பொதுமக்கள் தங்களை மீண்டும் தேர்ந்தெடுத்து நம்பிக்கையை வெளிப்படுத்தியதாகவும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
வரும் 2047-ஆம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்க அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமென கேட்டுக்கொண்ட அவர், நிதி பற்றாக்குறையின் போக்கை உணர்ந்து, 2025-26 நிதியாண்டுக்குள் அதனை 4.5 சதவீதத்துக்கும் கீழ் கொண்டு வருவோம் என சூளுரைத்தார்.