உத்தரபிரதேச சட்டப் பேரவையில் லவ் ஜிஹாத் சட்டத்தை கடுமையாக்கும் மசோதா பெரும்பாலான உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேறியது.
உத்தர பிரதேசத்தில் ஏற்கெனவே கட்டாய மதமாற்றத்துக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட சட்டப்படி அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இதை ஆயுள் தண்டனையாக உயர்த்தும் சட்ட மசோதா அம்மாநில சட்டப் பேரவையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
மசோதாவின் மீது குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில் பெரும்பாலான உறுப்பினர்கள் மசோதாவுக்கு ஆதரவளித்ததால், சட்டமாக நிறைவேறியது.
திருத்தப்பட்ட சட்டத்தின்படி, மதமாற்றம் செய்யும் நோக்கத்தில் பெண்கள் அல்லது சிறுமியை அச்சுறுத்தினாலோ, திருமணம் செய்தாலோ அதிகபட்சமாக 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.