இளவழகன் இயக்கி நடித்துள்ள ஜமா திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் உள்ள தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்க்கைமுறை மற்றும் சவால்களை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தை கூழாங்கல் திரைப்படத்தை தயாரித்த நிறுவனமான லேர்ன் அண்ட் டீச் புரொடக்சன்ஸ் தயாரித்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன் திரைப்படத்தின் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது டிரெய்லர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.