அனைத்து சக்திகளையும் ஒன்று திரட்டி மீட்பு பணியை மேற்கொண்டிருப்பதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
வயநாட்டில் நடந்த நிலச்சரிவு தொடர்பாக பேசிய கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் நிலச்சரிவால் பாதித்த பகுதிகளில் மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும், விமானப் படையின் 2 ஹெலிகாப்டர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்க ஏற்பாடு செய்துள்ளதாகவும் கூறினார்.