கேரளா மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரணையை தொடங்கியுள்ளது.
கனமழை காரணமாக வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஏராளமானோர் உயிரிழந்தனர். இதையடுத்து நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் உள்ள சுரங்கம், குவாரிகளின் விபரங்களை தாக்கல் செய்ய கேரளா அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.