உலகின் முதல் சிஎன்ஜி இருசக்கர வாகனமான பஜாஜ் நிறுவனத்தின் Freedom ஒருவாரத்திலேயே 6 ஆயிரம் புக்கிங் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெட்ரோல் மற்றும் டீசல்களினால் ஏற்படும் மாசுபாட்டினை குறைக்க மோட்டார் நிறுவனங்கள் மின்சார மற்றும் சிஎன்ஜி வாகனங்களை தயாரித்து வருகின்றன.
அந்தவகையில் பஜாஜ் நிறுவனம் உலகின் முதல் சிஎன்ஜி இருசக்கர வாகனத்தினை தயாரித்துள்ளது. 3 வேரியன்ட்களில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த இருசக்கர வாகனத்தின் அதிகபட்ச விலை 1.10 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.