அண்மைக்காலமாக தமிழ் திரைப்படங்களில் வன்முறை மற்றும் ரத்த காட்சிகள் அதிகளவில் இடம்பெற்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த காட்சிகள் இளைய தலைமுறையினரிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாக பலரும் கவலை தெரிவிக்கின்றனர்.
ஏன் இந்த கொலவெறி
ஒரு காலத்துல படம் ஆரம்பிக்கும் போது மங்கள இசை போட்டு கலாச்சாரம்மா ஆரம்பிப்பாங்க. காட்சிகள பொருத்தவர சட்டில்லான்ன காட்சிகள்ள இருக்கும் எம்ஜிஆரும், நம்பியாரும் கத்தி சண்ட போடுற சீன் அர மணி நேரம் இருந்தாலும் அதுல பெருசா ரத்த கரைய காட்ட மாட்டாய்ங்க. அதே மாதிரி ஒரு படம் முடியும் போதும் பாரம்பரியம்மா நன்றி வணக்கம் சுபம் அப்படின்னு முடிப்பாங்க. ஆனா இப்போ அத ஏன் கேட்கிறீங்க. ஒரே ரத்த வாட தான்
எம்ஜிஆர் பைட்
70’s mid 80’s வர கொலை, அடிதடி சீன்னுல ரத்தம் வர மாதிரியான காட்சிகள் இருக்கும். அந்த காட்சிகள காட்டுபோதே ரசிகர்கள் ஏ அங்க பாரு குங்கும்த்தையும் சாயத்தையும் காமிச்சிகிட்டு ரத்தம்ன்னு சொல்றாங்கன்னு கிண்டல் பன்னிப்பாங்க. எதையுமே ரியாலிட்டியா பன்னனுன்றதுல தெளிவா இருக்குற கமல் ஹாசன் இந்த கிண்டல்ல மேக்அப் மூலம்மா குருதி புனல்ன்ற படத்துல ஒடச்சிருப்பாரு. நிஜமாவே ஒருத்தன் இவ்வளவு அடிவாங்குன்னா இப்படிதான் உடல் இருக்குன்றத தெள்ளத்தெளிவா காமிச்சிருப்பாங்க.
குருதிபுனல்
90’sல மெல்ல மெல்ல இறுதி காட்சிகளுல மட்டும் கொலை செய்யுற மாதிரியான காட்சிகள்ல வைக்க ஆரம்பிச்சாங்க. இப்படி வர படங்கள தன்னோட குழந்தைகள்ல பாக்க விட கூடாதுன்றதுல்ல தெளிவா இருந்தாங்க. ஏன்னா அப்போ படங்கள் பாக்கனுன்னா தியேட்டர்ல மட்டும் தான் பாக்க முடியும். இந்த ஒடிடி கதையெல்லாம் இங்க இல்லாத நால குழந்தைகள் ரத்த வாடை அதிகமா இருக்குற படங்கள பாக்கம்மா இருந்தாங்க.
சிம்மராசி
ஆனா 2005க்கு பிறகு வந்த சில படங்கள் 2.30 மணி நேர படத்துல 1 மணி நேரத்துக்கும் மேல அடிதடி காட்சிகளா வர ஆரம்பிக்குது.
புதுப்பேட்டை
அப்பறம் கொஞ்சம் கொஞ்சம்மா வெற்றி மாறன், பா.ரஞ்சித், அருண் மாதேஷ்வரன், கார்த்திக் சுப்புராஜ் இவங்களாம் கேங்கஸ்டர் படம் தான் எடுப்பாங்கன்ற மித் வர ஆரம்பிக்குது. அதுவும் படத்துல வெட்டு குத்து கூட ரொம்ப ராவா…. அதாவது ஒருத்தன்ன குத்துராய்ங்க அப்படின்னா கத்திலருந்து அந்த பேர்சன்ன குத்துரதுலருந்து எல்லாமே ரத்தம் தெறிக்க தெறிக்க நமக்கே கூசுரமாதிரி இருக்குது.
மெட்ராஸ், பொல்லாதவன்
சரி இதுல நாலு கொஞ்சம் கத இருந்துச்சு. 2018க்கு மேல வர படங்களுல படம் ஆரம்பிச்சதுலருந்து கடைசி வர முழுக்க சண்ட வெட்டு குத்து. ஏன் பேசுற டையலாக்குல கூட வன்மம் தான்.
அவன் பொருள எடுத்து அவனையே செய்யுறோம்
இப்போ என்ன ஆகிடுச்சுன்னா ஏன் குத்துராய்ங்க எதுக்கு குத்துராய்ங்கன்னு தெரியாமையே போயிடுச்சு. இன்னும் சொல்லனுன்னா இதுக்கு முன்னாடி வர வன்ம காட்சிகள பாத்திட்டு முகம் சுழித்த ஆடியன்ஸ் ரசிக்க ஆரம்பிச்சுட்டாங்க.
சரி ரத்த காட்சிகள தாண்டி இங்க இன்னொரு இயக்குநர் இருக்காரு போதைய ஒழிக்கன்னு போத அதிக இருக்கு அப்படின்றத சொல்லறதுக்காக காட்சிகள் எப்படி இருக்கும்ன்னா போதைய எப்படிலாம் பதுக்கலாம் போதைய எப்படிலாம் யூஸ் பன்னுவாய்ங்கன்ற கற்றுக்கொடுக்கும் சீன் தான் அதிகமா இருக்கும்.
கைதி, லியோ
முந்தி அடல்ட் படங்கள் வந்துச்சுன்னா அப்போ ஓடிடி டிவி இதலாம் இல்லாத நால வெறும் தியேட்டர்ல பெரியவங்க பாக்கிறதோடவே போயிடும். ஆனா இப்போ A சான்றிதழ்ன்னு தியேட்டர்குள்ள விடாட்டியும், ஓடிடில டிஸ்க்ளைமர் போட்டாலும், எல்லார் கிட்டையும் மொபைல் போன் இருக்குறதால ரொம்ப ஈசியா சின்ன குழந்தைங்க பாக்குறாங்க.
இந்த வெட்டு குத்து ரத்த வாட சினிமாக்கள் நாட்டுக்கு என்ன அறிவுரைய சொல்ல வருதுன்றது கேள்வியாவும், இந்த மாதிரியான காட்சிகள் தான் கெத்துன்னு நினச்சிட்டு குழந்தைகளும் டீன்சும் முகம் சுழிக்கிற வார்த்தைகளையும் கையில ஆயுதங்களையும் எடுத்துட்டாங்கன்னா அடுத்த ஜெனரேசன் எங்க போகும்ன்றத நினச்சா ரொம்ப பயமாவும் இருக்கு.