லெபனான் மீது இஸ்ரேலின் ஆளில்லா விமானம் தாக்குதல் நடத்தியது.
இஸ்ரேலின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள கோலன் ஹைட்ஸ் பகுதியில் கால்பந்து திடல் ஒன்றில் சில நாட்களுக்கு முன் ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது.
இதில் குழந்தைகள் உள்ளிட்ட 12 பேர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் லெபனான் மீது இஸ்ரேல் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது.