இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் இந்தியா அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
இலங்கைக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றது. இரு அணிகளுக்கும் இடையேயான 3வது போட்டி நேற்று நடைபெற்றது.
இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் சேர்த்தது.
இதையடுத்து களமிறங்கிய இலங்கை அணியும் 20 ஓவர்களில் 137 ரன்கள் எடுத்து சமன் செய்தது. இதன் காரணமாக சூப்பர் ஓவர் முறை பின்பற்றப்பட்டத. இதில் இந்தியா திரில் வெற்றி பெற்றது.