பாரிஸ் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மனு பாக்கர் மற்றும் சரப்ஜோத் சிங்கிற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், பிரபல மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக், மணல் சிற்பத்தை வடிவமைத்துள்ளார்.
10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில், மனு பாக்கர், சரப்ஜோத் சிங் இணை வெண்கலப்பதக்கம் வென்றது.
அவர்களுக்கு வாழ்த்துகள் குவிந்து வரும் நிலையில், ஒடிசா மாநிலம் பூரி கடற்கரையில், மணல் சிற்பம் வடித்து சுதர்சன் பட்நாயக் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.