விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே அட்டை கம்பெனியில் சட்ட விரோதமாக பட்டாசு உற்பத்தி செய்ததாக விசிக நிர்வாகி உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருத்தங்கல் பகுதியில் செயல்பட்டு வரும் அட்டை கம்பெனியில் சட்டவிரோதமாக பட்டாசு உற்பத்தி செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனடிப்படையில் அங்கு போலீசார் சோதனை மேற்கொண்டபோது சட்டவிரோதமாக பேன்சி ரக பட்டாசுகள் உற்பத்தி செய்தது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட துணை செயலாளர் தலித்ராஜா உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், 80 கிலோ வெடி மருந்து பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் தலைமறைவாக உள்ள இருவரை தேடி வருகின்றனர்.