சிவகங்கையில் பாஜக பிரமுகர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சுட்டுப்பிடித்த நபர் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
சிவகங்கை மாவட்டம், வேலாங்குளத்தை சேர்ந்த பாஜக பிரமுகரான செல்வக்குமார் கடந்த 26ஆம் தேதி மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் தொடர்புடைய மருதுபாண்டி, அருண்குமார், சதீஷ்வரன், வசந்தகுமார், விஷால் ஆகிய 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மணிகண்டன் உள்ளிட்ட 5 பேரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.