திருப்பத்தூர் மாவட்டம், பச்சூர் பகுதியில் ரயில்வே மேம்பாலம் மற்றும் சுரங்கப்பாதை அமைக்கும் பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
ரயில்வே மேம்பாலம் மற்றும் சுரங்கப்பாதை அமைக்கும் பணியால் பச்சூர் ரயில்வே ஸ்டேஷன் அருகே இருந்த ரயில்வே இரும்பு கேட் இழுத்து மூடப்பட்டது.
இதனால், அவ்வழியாக சென்ற வாகனங்கள், மாற்றுப்பாதை வழியாக ஒரு கிலோமீட்டர் தூரம் சுற்றி வருகிறது. இதனால், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், அலுவலகம் செல்வோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், சிலர், ஆபத்தை உணராமல் ரயில்வே பாதையை கடந்து செல்கின்றனர்.