ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவராக செயல்பட்டு வந்த இஸ்மாயில் ஹனியி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேல் மீது இஸ்மாயில் ஹனியி தலைமையிலான ஹமாஸ் ஆயுதக்குழுவினர் தாக்குதல் நடத்தினர்.
இதில் ஏராளமானோர் உயிரிழந்தனர். இந்த நிலையில், இஸ்மாயில் மற்றும் அவரது உதவியாளர் ஈரானில் கொலை செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. .