டெல்லி பழைய ராஜேந்தர் பகுதியிலுள்ள ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் வெள்ள நீர் புகுந்து 3 மாணவர்கள் பலியான விவகாரத்தைக் கண்டித்து, சக மாணவர்கள் 2-வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
பலியான மாணவர்களின் குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும், கழிவு நீர் வடிகால் பிரச்சனைக்கு நிரந்தத் தீர்வு காண வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாணவர்கள் காலவரையற்ற உண்ணாவிரத் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
மேலும், அனைத்து பயிற்சி நிறுவனங்களிலும் உள்ள பாதுகாப்பு வசதிகள் குறித்து தணிக்கை செய்ய வேண்டுமெனவும் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விபத்து நிகழ்ந்து 4 நாட்கள் ஆகியும் இவ்விவகாரத்தில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.