கரூரில் சின்ன ஆண்டாங்கோவில் பகுதியில் குடிநீர் வினியோகம் செய்யப்படாததால் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
எம்.ஜி.ஆர் நகருக்கு உட்பட்ட 4 தெருக்களிலும் கடந்த ஒரு மாதமாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்றும், குடிநீரில் சாக்கடை நீர் கலந்து வருவதாகவும் புகார் எழுந்தது.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து சாலையின் இருபுறமும் கேபிள் கம்பிகளை கட்டி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து போலீசார் நடத்திய சமரச பேச்சுவார்த்தையை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.